முகப்பு
உணவே மருந்து

முதுகு வலியை குணமாக்கும் ஊட்டச்சத்துள்ள பானம்

முதலில் நாயுருவி இலையை தூள் செய்து வைத்துக் கொள்ளவும்

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:06 AM
பகிர்:

தேவையான பொருட்கள்

காய்ந்த நாயுருவி இலை - 100 கிராம் 
கொண்டைக்கடலை - 250 கிராம் 
சோயா - 250 கிராம் 
சிறு பருப்பு - 100 கிராம்
மிளகு -  அரை ஸ்பூன்
ஏலக்காய் -  5 கிராம் 

செய்முறை : முதலில் நாயுருவி இலையை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் லேசாக வறுத்து நாயுருவி இலையுடன் கலந்து அரைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதனை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு  வரவும்.

பயன்கள் : இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குணமாகும். மூல நோய்கள் விலகும். பற்கள் உறுதி பெற்று உடல் வனப்பை உண்டாக்கும் அற்புதமான ஊட்டச்சத்து மாவு.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.