இளையோர் நலம்

ஒரே வாரத்தில் தூக்கம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் சரியாக இதோ எளிய(?) வழி

ஒரே வாரத்தில் உங்கள் தூக்கம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் சரியாக ஒரு எளிய வழியை கண்டறிந்துள்ளனர்.

தினமணி


லண்டன்: ஒரே வாரத்தில் உங்கள் தூக்கம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் சரியாக ஒரு எளிய வழியை கண்டறிந்துள்ளனர்.

அதாவது, மாலை நேரத்துக்குப் பிறகு ஸ்மார்ட்ஃபோன், நீல நிறத்திலான வெளிச்சம் உங்கள் கண்களை நேரடியாக எதிர்கொள்ளாமல் தவிர்ப்பது, டேப், அல்லது கணினிகளை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருக்காமல் குறைப்பது போன்றவற்றை செய்தால், ஒரு வாரத்துக்குள் உங்களுக்கு இருக்கும் தூக்கம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடுமாம்.

அதுவும் குறிப்பாக டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்னைகள் நிச்சயம் சரியாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒருவர் ஒரு நாளில் 4 மணி நேரம் செல்போன் அல்லது ஸ்க்ரீன்களைப் பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அவருக்கு சராசரியாக தினமும் அரை மணி நேரம் தூக்கம் வருவது தள்ளிப் போகிறது என்கிறது கண்டுபிடிப்பு.

அதுவும் மாலை நேரத்துக்குப் பிறகு இந்த பழக்கத்தை அதிகம் கொண்டிருப்பவர்களுக்கு உறக்கம் என்பதே பிரச்னையாகிவிடுகிறதாம். இதனால் மூளையின் கடிகார அமைப்பே சீர்குலைந்து விடுவதாகவும் எச்சரிக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், எளிய வழி என்று ஆய்வாளர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் அது எளிதா என்பதை டீன் - ஏஜ் இளைஞர்கள்தானே முடிவு செய்ய வேண்டும்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா

உதகையில் ட்ரோன் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு

ஓவேலி பகுதியில் காட்டு யானையைப் பிடிக்க தயாா் நிலையில் கும்கி

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

ஓணம் பண்டிகை: சென்னை - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT