முகப்பு

ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது. இந்நிலையில், இந்தியா தனது பதக்க வேட்டையை இன்று (சனிக்கிழமை) தொடங்கியுள்ளது.

21 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்முறையாக பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பதக்கத்தை வென்றுள்ளது. 49 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு வெற்றிபெற்று வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளார்.

26 வயதான மீராபாய் சானு மொத்தமாக, 202 கிலோ எடையை தூக்கி சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி படைத்த சாதனையை முறியடித்துள்ளார். சீனாவின் ஹூ சிஉய் தங்க பதக்கத்தையும் இந்தோனேசியாவின் ஐசா விண்டி கான்டிகா வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT