முகப்பு
இந்தியா

அமைச்சர் கபில் சிபலின் கருத்து 2-ஜி அலைக்கற்றை விசாரணையை திசை திருப்பும் முயற்சி: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

புது தில்லி, ஜன.8: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பது விசாரணையை திசை திருப்பும் முயற்சியின் ஒரு பகுதி என்று

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

புது தில்லி, ஜன.8: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பது விசாரணையை திசை திருப்பும் முயற்சியின் ஒரு பகுதி என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 இத்தகைய கருத்தை தெரிவித்ததன் மூலம் அவர் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்றும் சுவாமி கூறினார்.

 இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்துமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம்தான் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் சுவாமி தெரிவித்துள்ளார்.

 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மிக அதிகமாக காட்டப்பட்டுள்ளது என்று மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

 2-ஜி அலைக்கற்றை விற்பனை செய்ததில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு கிடையாது என்று கபில் சிபல் குறிப்பிட்டிருந்தார். 2007-08-ம் ஆண்டுகளில் 2-ஜி அலைக்கற்றை லைசென்ஸ் 122 நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. 35 நிறுவனங்களுக்கு இரட்டை தொழில்நுட்ப சேவை அளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

 தணிக்கை துறை அதிகாரியின் கணக்கீட்டை கபில் சிபல் விமர்சித்துள்ளார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ நடத்திவரும் விசாரணையை அவர் திசை திருப்பியுள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2-ஜி சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்களையும் கபில் சிபல் பார்க்கக் கூடாது என உத்தரவிடக் கோரி மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்யப்போவதாக அறிக்கையில் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →