முகப்பு
இந்தியா

ரூ.1 கோடி லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

புணே, ஜன.8: ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய சுங்க அதிகாரி சனிக்கிழமை கையும் களவுமாக பிடிபட்டார்.  இரும்பு ஆலை நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.1கோடி லஞ்சம் கேட்டார் மத்திய சுங்க அதிகாரி கே

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:03 PM
பகிர்:

புணே, ஜன.8: ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய மத்திய சுங்க அதிகாரி சனிக்கிழமை கையும் களவுமாக பிடிபட்டார்.

 இரும்பு ஆலை நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.1கோடி லஞ்சம் கேட்டார் மத்திய சுங்க அதிகாரி கே.பி.மஹாதிக் என்பவர். இந்த விஷயம் குறித்து அறிந்த சி.பி.ஐ. அவரைக் கண்காணித்து வந்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொழிலதிபரிடமிருந்து மஹாதிக் பணம் பெறும்போது மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

 மேலும் இவர் வீட்டில் நடத்திய சோதனையின்போது ரூ.6.8 லட்சம் ரொக்கம், 800 அமெரிக்க டாலர்கள் (ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40,000), ஒரு கைத்துப்பாக்கி, பல நிலபேர விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின.

முழு கட்டுரையைப் படிக்க →