முகப்பு
இந்தியா

பெரும் பணக்காரர்களுக்கு அதிக வருமான வரி: சி.ரங்கராஜன் ஆலோசனை

பெரும் பணக்காரர்களுக்கு அதிக வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பெரும் பணக்காரர்களுக்கு அதிக வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மத்திய நிதித் துறையின் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த ரங்கராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தது:

இப்போதுள்ள வருமான வரி விதிப்பு முறையை முற்றிலுமாக மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொருள் ஈட்டுபவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கலாம். நமது பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதிக வருமானம் உள்ளவர்கள் கூடுதல் பங்களிப்பைத் தர முன்வர வேண்டும்.

அடுத்த மத்திய பட்ஜெட்டில் பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்றார்.

தற்போதுள்ள தனி நபர் வருமான வரி விகிதம் 1997-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது அமலானது. இதன்படி, 10%, 20%, 30% என மூன்று அளவுகளில் வருமான வரி விதிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →