கேதார்நாத் அழைக்கிறது
சமீபத்தில் கேதார்நாத்தை தாக்கிய பேரழிவு இன்னும் பல காலத்துக்கு நம் நினைவைவிட்டு அகலாது. நமக்குத் தெரியவந்துள்ளவரை, இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே நம்மை உலுக்கிவிடும்.
அண்மையில் கேதார்நாத்தை தாக்கிய பேரழிவு இன்னும் பல காலத்துக்கு நம் நினைவைவிட்டு அகலாது. நமக்குத் தெரியவந்துள்ளவரை, இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே நம்மை உலுக்கிவிடும். நமக்குத் தெரியாத - ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாத- உயிரிழந்த குழந்தைகள், பெண்கள், ஆண்களின் எண்ணிக்கை நம் நெஞ்சங்களைக் கரைய வைக்கும்.
சபரிமலை, வேளாங்கண்ணியைப் போல, நாட்டின் எல்லா பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அடைக்கலமாக விளங்கும் இடம் கேதார்நாத். இந்த இக்கட்டான நேரத்தில் உதவுவது நம் அனைவரின் கடமையாகும். கேதார்நாத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளை புனரமைக்க பல ஆண்டுகள் ஆகும் என்று தெரிகிறது.
நம் முன் இருக்கும் இந்த சவால் மிக்க பணியைச் செய்து முடிக்க நிதி தேவைப்படுகிறது.
தங்களால் இயன்ற தொகையை அளிக்க முன்வருபவர்களுக்கு உதவும் வகையில்,
''The New Indian Express Kedarnath Relief Fund''
- என்ற பெயரில் புதிய வங்கிக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும பணியாளர்கள் தங்கள் மாத ஊதியத்தின் ஒரு பகுதியை அளிக்கிறார்கள். இதைத் தவிர நிறுவனமும் அளிக்கும் நிதியுடன் மொத்தம் ரூ. 25 லட்சம் கொண்டு, ஒரு தொடக்க வைப்பு நிதி உருவாக்கப்படுகிறது.
வாசகர்களும் எம்முடன் இணைந்து செயல்படும் பிற நிறுவனங்களும் இந்த நிதிக்கு தாராளமாக தங்களுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
''The New Indian Express Kedarnath Relief Fund'' என்ற பெயருக்கு எழுதப்பட்ட காசோலையை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் எந்த ஒரு அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கலாம். அதற்கான ரசீது உங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் ஊரில் உள்ள நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கிளை அலுவலகத்தில் நேரடியாக பணமாகவும் உங்களது உதவித் தொகையை அளித்து அதற்கான ரசீதை உடனே பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைன் முறையில் உங்கள் உதவித் தொகையை
Indian Bank Current A/c No. 6139752927
என்கிற வங்கிக் கணக்கில்
''The New Indian Express Kedarnath Relief Fund,
SWIFT Code IDIBINBBPAD / IFSC Code: IDIB000P001''
என்கிற பெயரில் செலுத்தலாம். நீங்கள் பணம் செலுத்திய விவரங்களை
kedarnath@newindianexpress.com
என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதித் தெரிவிக்கவும்.
மேற்கண்ட வங்கிக் கணக்கில் நீங்கள் அனுப்பும் நன்கொடைகளுக்கான ரசீதை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிவைக்கும். எனவே, இந்தப் படிவத்திலும் விவரத்தை நிரப்பலாம் - படிவம்:
உதவியளித்தவர்கள் பெயர்கள் எமது நாளிதழ்களில் பின்னர் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு 044-23457518 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் அல்லது மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
கேதார்நாத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உதவித் திட்டத்துக்காக, உரிய அதிகாரமுள்ள அமைப்பிடம் இந்த நிதி வழங்கப்படும். வாசகர்களின் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம்.
கேதார்நாத்தின் அழைப்பை ஏற்று பரந்த உள்ளத்துடன் உங்களது உதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மனோஜ் குமார் சொந்தாலியா
தலைவர் & நிர்வாக இயக்குநர்