இதுதான் காஷ்மீர்! உதவிக்காக ஏங்கும் மக்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீரில், குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு, நாடு முழுவதிலிருந்தும் உதவி தேவைப்படுகிறது என்றும், அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்த தேசியப் பணியில், நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி'யைத் தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
- "THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND' என்ற பெயரில், நிதிக்கான காசோலைகளை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு பதிப்பு மைய அலுவலகத்தில் வழங்கலாம்.
- ரொக்கப் பணமாக வழங்க விரும்புவோர், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு அலுவலகத்தில் வழங்கி, அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.
- ஆன்லைன் மூலம் நிதியளிக்க விரும்புபவர்கள், "THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND'என்ற பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள நடப்புக் கணக்கு எண்.6260119197-இல் நேரடியாகச் செலுத்தலாம்.
வங்கிக்கான SWIFT-CODE:IDIBINBBPAD. IFSC CODE:IDIB000P001.
ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள்,அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.
நிதியளித்த அனைவரது பெயர்களும், நாளேட்டில் வெளியிடப்படும். இந்த நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும்.
காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது. அதற்கு உதவ வேண்டியது நமது கடமை.
மனோஜ் குமார் சொந்தாலியா,
தலைவர் & நிர்வாக இயக்குநர்