இந்தியா

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 25 குறைக்க கோரிக்கை

கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PTI

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களையில் இன்று நடைபெற்ற நேரமில்லா நேரத்தில் இப்பிரச்னையை எழுப்பிய மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை பீப்பாய் 35 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளது. இந்த விலை குறைவை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 25 வரை குறைக்க வேண்டும் என்றார்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் 50,000 புதிய வீடுகளை கட்டுவதற்காக ரூ. 5 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் பி. நாகராஜன் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் பேசிய ராஷ்டீரிய ஜனதா தளம் உறுப்பினர் ஜெயபிரகாஷ் நாராயணன் யாதவ், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT