இந்தியா

பெட்ரோல் லிட்டருக்கு 50 காசு குறைப்பு; டீசல் 46 காசு குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 46 காசுகளும் குறைக்கப்படுவதாக எண்ணைய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

PTI

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 46 காசுகளும் குறைக்கப்படுவதாக எண்ணைய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 60.28 ஆகவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 47.28 ஆகவும் குறைந்துள்ளது.

ரூ. 25 குறைக்க கோரிக்கை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 38 அமெரிக்க டாலர்  எந விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களையில் இன்று நடைபெற்ற நேரமில்லா நேரத்தில் இப்பிரச்னையை எழுப்பிய மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், சர்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெய் விலை பீப்பாய் 38 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளது. இந்த விலை குறைவை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 25 வரை குறைக்க வேண்டும் என்றார்.

எனினும் எண்ணெய் நிறுவனங்கள் வெறும் 50 காசு மட்டுமே குறைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT