இந்தியா

கேட்டதை விட 5 மடங்கு பணத்தை அள்ளிக் கொடுத்த ஏடிஎம்

கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டும் என்று சொல்லிக் கேட்டிருப்போம்.. ஆனால் இங்கு ஒரு ஏடிஎம், வாடிக்கையாளர்கள் நூறு ரூபாய் கேட்டால், ஐநூறு ரூபாய் கொடுத்து அதுவும் வங்கிக் கணக்கில் இருந்து கழிக்காமல் கொடுத்து ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

PTI

கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டும் என்று சொல்லிக் கேட்டிருப்போம்.. ஆனால் இங்கு ஒரு ஏடிஎம், வாடிக்கையாளர்கள் நூறு ரூபாய் கேட்டால், ஐநூறு ரூபாய் கொடுத்து அதுவும் வங்கிக் கணக்கில் இருந்து கழிக்காமல் கொடுத்து ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம், அஜித்கார் நகர்ப்பகுதியில் அமைந்திருந்த தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை விட 5 மடங்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அவர்களது கணக்கில் இருந்து கழிக்கப்படாமல் இருந்துள்ளது.

இது குறித்து வங்கி நிர்வாகத்துக்கு தகவல் வரவே, உடனடியாக அந்த ஏடிஎம் மூடப்பட்டுவிட்டது.

இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட அளவை விட அதிகமான பணம் ஏடிஎம் பணப் பெட்டியில் அடுக்கப்பட்டதே காரணம் என தெரிய வந்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களால் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்றோ, அதனை மீட்க வங்கி எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றோ இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT