இந்தியா

தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு: பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கீர்த்தி ஆசாத்

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.

PTI

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தில்லி கிரிக்கெட் சங்க தலைவாரக இருந்த காலத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் ஆரம்பம் முதலே முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதீய ஜனதா எம்.பி. கீர்த்தி ஆசாத் வலியுறுத்தி வருகிறார்.

நிதி அமைச்சருக்கு எதிராக கட்சி எம்.பி. போர்கொடி உயர்த்தி வருவது பாஜகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக பொதுச் செயலாளர் ராம்லால் இன்று காலை கீர்த்தி ஆசாத்தை சந்தித்து பேசினார். அருண் ஜேட்லி விவகாரத்தில், கீர்த்தி ஆசாத் அமைதியாக இருக்குமாறு கட்சி வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் அதை மறுத்து டுவிட் செய்துள்ள கீர்த்தி ஆசாத், கட்சி என்னை அமைதிப்படுத்த முயற்சிப்பதாக கூறுவது வெறும் புரளியே. தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகள் குறித்த என்னுடைய போராட்டம் தொடரும் என்றார்.

பின்னர் இவ்விவகாரம் குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் கீர்த்தி ஆசாத் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT