இந்தியா

ஏர் இந்தியா தொழில்நுட்ப ஊழியர் பலி: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா தொழில்நுட்ப ஊழியர் இறந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும், ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

PTI

மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா தொழில்நுட்ப ஊழியர் இறந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கும், ஏர் இந்தியா நிறுவனத்துக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் கடந்த 16 ஆம் தேதி இரவு, தொழில்நுட்ப ஊழியர் ரவி சுப்பிரமணின் என்ஜின் அருகே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது துணை விமானி என்ஜினை இயக்கியதால் அவர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஒரு விபத்து என குறிப்பிடப்பட்டாலும், ஊடகங்களில் வெளியான தகவல்கள் அவ்வாறில்லை என தெரியவருகிறது.

இந்திய அரசியல் சாசனம் வாழ்வதற்கு உரிமை வழங்கியுள்ளது. அதில் பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமையும் சேர்க்கப்பட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி டி. முருகேசன் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலர், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இச்சம்பவம் குறித்து இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT