இந்தியா

மால்டா மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் பலி

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தல் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் பலியாகியுள்ளன.

PTI

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தல் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 குழந்தைகள் பலியாகியுள்ளன.

இந்த குழந்தைகளோடு சேர்த்து கடந்த 72 மணி நேரத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் மற்றும் துணைத் தலைவர் அமித் டான் கூறுகையில், நேற்று உயிரிழந்த குழந்தைகளில் ஒரு குழந்தை, பிறக்கும் போதே எடை குறைவாக 960 கிராம் மட்டுமே இருந்தது. சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது. மேலும் இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வரும் போதே உயிரிழந்துவிட்டன என்று தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மரணம் குறித்து விசாரிக்க 5 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT