அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் கேந்திரிய வித்யாலயா: ஸ்மிருதி இரானி
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய ஸ்மிருதி இரானி, மக்களவை உறுப்பினர்கள் பலரும், தங்களது தொகுதியில் ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியையாவது துவக்க ஆர்வத்தோடு இருப்பதாகக் கூறினார்.
வரும் நிதிநிலை அறிக்கையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் துவக்க கூடுதல் நிதி ஒதுக்க முயற்சி எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
Advertisement