முகப்பு
இந்தியா

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார் அருண் ஜேட்லி

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் 5 பேர் மீது தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Updated On : 21 டிசம்பர், 2015 at 3:27 PM
பகிர்:

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் 5 பேர் மீது தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்..

தன்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான தகவல்களை அவர்கள் பரப்பி வருவதாகவும், தில்லி கிரிக்கெட் சங்கத்தில் தான் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் தன் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் அருண் ஜேட்லி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இருந்தபோது, அங்கு முறைகேடுகள் நடைபெற்றதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.