முகப்பு
இந்தியா

பிகார்: ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பாஜகவில் இணைந்தவர் நீக்கம்

கட்சி தலைமை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தலைவர் மோனஷிர் ஹாஸன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

பாரதீய ஜனதா கட்சி தலைமை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த தலைவர் மோனஷிர் ஹாஸன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் சமீபத்தில்தான் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் மோனஷிர் ஹாஸன். இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். சமீபத்தில் நடைபெற்ற பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஹாஸனுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் 'சீட்' வழங்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த அவர், தேர்தலில் பாஜக தோல்வியடைந்தப் பின்னர் கட்சியையும், கட்சி தலைமையையும் கடுமையாக விமர்சித்தார். கட்சியில் சகிப்புத்தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து ஹாஸனை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி, பிகார் மாநில பாஜக தலைவர் மங்கள் பாண்டே உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.