தென் தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை மையம்
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்போது பெய்து வரும் மழை புதன்கிழமையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்போது பெய்து வரும் மழை புதன்கிழமையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகத்தின் கடலோரம் மற்றும் தெற்கு உள் மாவட்டங்கள், கேரள உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை இடியுடன் கனமழை பெய்யும். தெலுங்கானாவை பொறுத்தவரை வறண்ட வானிலையே தொடரும்.
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. மயிலை (கன்னியாகுமரி), மேலூர் (மதுரை), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), நாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.