அம்பேத்கர் இல்லம்: லண்டனில் மஹாராஷ்டிரா அமைச்சர்கள், அதிகாரிகள் ரூ. 25 லட்சம் செலவு
இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் லண்டனில் பயின்றபோது தங்கியிருந்த வீட்டை வாங்குவதற்காக மஹராஷ்டிரர அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மேற்கொண்ட பயணத்துக்காக ரூ. 25 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் லண்டனில் பயின்றபோது தங்கியிருந்த வீட்டை வாங்குவதற்காக மஹராஷ்டிரர அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மேற்கொண்ட பயணத்துக்காக ரூ. 25 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தகவல் ஆர்வலர் அணில் கல்காலி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வடிவமைப்பாளரான சட்டமேதை டாக்டர் அம்பேத்கர், கடந்த 1921-22 ஆண்டுகளில் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
Advertisement
அப்போது அவர் கிங் ஹென்றி சாலையில் உள்ள ஒரு மூன்று மாடி வீட்டில் தங்கியிருந்ததார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், அந்த வீட்டை விலைக்கு வாங்குவது என மஹாராஷ்டிர அரசு முடிவு செய்தது.
இதுகுறித்த விவரங்களை அனில் கல்காலி கேட்டபோது, அந்த வீட்டை வாங்குவதற்காக சமூகநலத் துறை அமைச்சர்கள் ராஜ்குமார் படோலி, திலீப் காம்ளே, செயலர் உஜ்வால் உகே ஆகியோர் லண்டன் சென்றதற்காக அரசு சார்பில் ரூ. 25.45 லட்சம் செலவு செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும், 2050 சதுர அடி கொண்ட அந்த கட்டடத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்றே தெரியவில்லை என்றும் சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. அந்த வீட்டை வாங்குவதற்கு ரூ. 40 கோடி ஒதுக்கிய நிலையில், கடைசியாக ரூ. 32 கோடியில் அந்த வீடு வாங்கப்பட்டுள்ளது.
லண்டன் செல்லும் பிரதமர் மோடி இந்த வீட்டை திறந்து வைக்கவிருக்கிறார். அவருடன் முதல்வர் பட்னாவீஸும் செல்கிறார்.