சோட்டா ராஜனின் சி.பி.ஐ. காவல் நீட்டிப்பு
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சி.பி.ஐ. காவலை நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பல்வேறு கொலை, கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், சில நாள்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் சர்வதேச போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தியா கொண்டுவரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement
இதன்பின்னர், சோட்டாராஜன் மீதான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.க்கு மாற்றி மஹாராஷ்டிர அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து நவம்பர் 7 ஆம் தேதி முதல் காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பத்து நாள்கள் காவல் நிறைவடைந்த நிலையில், இன்று அவரது காவலை நவம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.