முகப்பு
இந்தியா

மேகி நூடூல்ஸ் தடை நீக்கம்: தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

மேகி நூடூல்ஸ் மீதான தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

Updated On : 16 நவம்பர், 2015 at 8:44 PM
பகிர்:

மேகி நூடூல்ஸ் மீதான தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக காரீயம் இருந்ததால், நெஸ்லே நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மேகி நூடூல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து அந்நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன்பின்னர், அரசு அங்கீகரித்த ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில்,  மேகி நூடூல்ஸில் எவ்வித நச்சுப் பொருளும் இல்லை என தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து மேகி நூடூல்ஸ் மீதான தடையை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியது.

இத்தடையை எதிர்த்து இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பில் பல தவறுகள் உள்ளன. மேலும், மேகி நிறுவனம் அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பிவைத்த மாதிரி மேகி நூடூல்ஸ்களில் நம்பகதன்மை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.