முகப்பு
இந்தியா

குளிர்கால கூட்டத்தொடர்: கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்ட அரசு முடிவு

குளிர்கால கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவது என மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தீர்மானித்துள்ளது.

Updated On : 17 நவம்பர், 2015 at 6:03 PM
பகிர்:

பிகார் தேர்தலுக்குப் பின் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒர் அணியில் திரண்டுள்ள நிலையில், குளிர்கால கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவது என மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 26 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பிகார் தேர்தலுக்கு பின் நடைபெறும் இக்கூட்டத்தில், அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை எழுப்புவதற்கு எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.

Advertisement

சகிப்புதன்மை, விருதுகளை திரும்ப அளித்தல், தத்தாரி சம்பவம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என தெரிகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெIங்கைய நாயுடு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்கவிருக்கிறார். நாடாளுமன்றத்தில் அரசு மேற்கொள்ளவிருக்கும் வழிமுறைகள் குறித்து அவர் விவாதிப்பார் என தெரிகிறது. மேலும், அவர் எதிர்க் கட்சி தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

பிகார் தேர்தல் முடிவுகள் என்பது நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிர்கட்சிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அல்ல என்றார் நாயுடு.

எதிர்கட்சிகளின் போராட்டத்தால், ஏறக்குறைய மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் பொதுச் செயலர் கே.சி. தியாகி, வெறுப்பு அரசியல் மேற்கொண்டு வரும் ஐந்து மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.