முகப்பு
இந்தியா

பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு: ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 நவம்பர், 2015 at 11:01 AM
பகிர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து ராணுவமும், காவல்துறையும் இணைந்து நடத்திய கூட்டு அதிரடிப்படைத் தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து மிகப் பயங்கர, நவீன ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள பொருட்களை வைத்துப் பார்க்கும் போது, பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக ராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.