மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை: சோனியா
பிரதமர் நரேந்திர மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கூறியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பிகாரின் பகல்பூர் மாவட்டத்தில் தனது முதல் பிரசாரத்தைத் துவக்கிய சோனியா காந்தி, காங்கிரஸ் - ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்திருக்கும் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும், தேர்தலில் பிரதமரின் வெற்று வாக்குறுதிகளை விரட்ட வேண்டும் என்றும் கூறினார்.