ரயிலில் அடிபட்டு இரு கால்களையும் இழந்த இளைஞர்
விருதுநகரில் வெள்ளிக்கிழமை காலை ரயிலில் அடிபட்ட இளைஞர் ஒருவருவரின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டது.
இந்தியாரயிலில் அடிபட்டு இரு கால்களையும் இழந்த இளைஞர்
விருதுநகரில் வெள்ளிக்கிழமை காலை ரயிலில் அடிபட்ட இளைஞர் ஒருவருவரின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டது.
விருதுநகரில் வெள்ளிக்கிழமை காலை ரயிலில் அடிபட்ட இளைஞர் ஒருவருவரின் இரு கால்களும் துண்டிக்கப்பட்டது.
விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளி நாகேந்திரன் (29). இவர் காலைக் கடனைக் கழிப்பதற்காக அப்பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே சென்றுள்ளார். சற்று காது கேளாத அவர், காலைக்கடனை முடித்துவிட்டு தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்லும் விரைவு ரயில் வந்து கொண்டிருந்துள்ளது. அருகில் ரயில் வந்ததை அறிந்த நாகேந்திரன், தண்டவாளத்திலிருந்து வெளியே குதித்துள்ளார். இதில் இரு கால்களும் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்டது. அவரது உடல் முட்புதரில் போய் விழுந்தது. உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விருதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.