ஈராகில் மக்கள் கூடும் சந்தையில் கார் வெடி குண்டு வெடித்து சிதறியது: 12 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாக்கில் கார் ஒன்றின் மூலம் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாக்கில் கார் ஒன்றின் மூலம் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அல்-அமீன் பாக்தாத் ஷியைட் மாவட்டத்தில் மக்கள் கூடும் சந்தையில் கார் ஒன்றின் மூலம் பயங்கர வெடி குண்டு ஒன்று வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 41 பேருக்கு படுகாயம் ஏற்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த வெடி குண்டு விபத்தில், சந்தையில் உள்ள பல கடைகள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement