முகப்பு
இந்தியா

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 2 ஏப்ரல், 2016 at 2:33 PM
பகிர்:

கொல்கத்தா: கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

பாலத்தின் கீழே சிறிய கோயில் இருந்த இடத்தில் மீட்புப் பணி நடந்த போது, இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த இரண்டு ஆண்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

கொல்கத்தா நகரின் வர்த்தகப் பகுதியான படாபஜார் அருகே விவேகானந்தா சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த வியாழக்கிழமை பிற்பகலில் இடிந்து விழுந்தது.

Advertisement

இந்த விபத்தில் சிக்கிய 24 பேர் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன.

89 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.