தில்லியில் வேகமாகக் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவன் மீது வழக்கு
தில்லியில், 17 வயது சிறார் ஒருவர் அதிவேகமாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி : தில்லியில், 17 வயது சிறார் ஒருவர் அதிவேகமாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். இதையடுத்து, அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம், தில்லியில் மிக வேகமாகக் காரை ஓட்டி, சாலையைக் கடந்தவர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டதில், விபத்தை ஏற்படுத்திய மெர்சிடிஸ் காரை 17 வயது சிறார் ஓட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
Advertisement
அவர் மீது மரணம் விளைவிக்கும் குற்றப் பிரிவின் (304) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில், அந்த சிறுவன் ஏற்கனவே, சாலை விதி மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், இதேப்போன்று ஒரு சாலை விபத்தை அச்சிறுவன் நிகழ்த்தியிருப்பதும், பாதிக்கப்பட்டவர் வழக்குப் பதிவு செய்யாததும், ஏற்கனவே அதிக வேகமாக காரை இயக்கியதற்காக 2 முறை அபராதம் செலுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.