சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இமாச்சலில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. இதனால், சண்டிகர், மாணலியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
மாண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக ஹனோகி கோயிலுக்குச் செல்லும் வழி 6 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டது. சாலைகளைச் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.