முகப்பு
இந்தியா

கல்விச் சான்றிதழ்களை பகிரங்கமாக வெளியிடுங்கள்: மோடிக்கு கெஜ்ரிவால் சவால்!

சர்ச்சைகளில் இருந்து விடுபடுவதற்கு கல்வி சான்றிதழ்களை பகிரங்கமாக வெளியிடுங்கள் என்று பிரதமர் நரேமந்திர மோடிக்கு, தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விட்டுள்ளார்.  

Dinamani
Updated On : 15 டிசம்பர், 2016 at 2:14 PM
பகிர்:

புதுதில்லி: சர்ச்சைகளில் இருந்து விடுபடுவதற்கு கல்வி சான்றிதழ்களை பகிரங்கமாக வெளியிடுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சவால் விட்டுள்ளார்.  

தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று காலை தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவிவருகிறது.முதலில் அவர் தான் கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறினார்.  பின்னர் அவர் குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழங்களில் அஞ்சல் வழியில் பயின்றதாக சான்றிதழ்களை காட்டினார். ஆனால் அவையும் போலி என்று குற்றசாட்டு எழுந்தது.

Advertisement

ஒருவேளை அவருடைய கல்விச்சான்றிதழ்கள்  உண்மையானதுதான் என்றால் அவற்றை வெளியிட அவர் தயங்குவது ஏன்? ஏன் அவற்றை மறைக்கிறார் என்று கெஜ்ரிவால்கேள்வி எழுப்பினார். மேலும் மோடியுடைய தயக்கமே சந்தேகத்தை கிளப்புவதாகவும் அவர் கருத்து தெரிவித்தார். 

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மோடியின் கல்விச் சான்றிதழ்கள் குறித்த விபரங்களை தரக் கோரி  மத்திய தகவல் ஆணையத்தை கெஜ்ரிவால் அணுகினார். அப்பொழுது மோடியின் பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு தொடர்பான தகவல்களை கேஜ்ரிவாலுக்குஅளிக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.