இந்தியா

மத்திய அரசை எதிர்த்த கட்ஜுவின் மனு: தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

தன்னை விமர்சித்து மத்திய அரசு கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

புதுதில்லி: தன்னை விமர்சித்து மத்திய அரசு கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சமீபத்தில் மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்து சிலகருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனால் கடும் அதிருப்தியடைந்த மத்திய அரசு கட்ஜுவை விமர்சித்து தீர்மானம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் நிறைவற்றியிருந்தது. 

மத்திய அரசின் இந்த தீர்மானத்தை எதிர்த்து மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் யு .யு.லலித் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலே தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அதே நேரத்தில் கட்ஜு நாடாளுமன்ற தீர்மானத்தை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்யவே முடியாது என்று கூறி மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனுவையும் உச்சநீதிமன்றத்தம் தள்ளுபடி செய்து விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT