முகப்பு
இந்தியா

தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் 'திடீர்' ராஜிநாமா!

யூனியன் பிரதேசமான தில்லியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த நஜீப் ஜங் தன்னுடைய பதவியை 'திடீர்' ராஜிநாமா செய்துள்ளார்.

Dinamani
Updated On : 22 டிசம்பர், 2016 at 4:53 PM
பகிர்:

புதுதில்லி: யூனியன் பிரதேசமான தில்லியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த நஜீப் ஜங் தன்னுடைய பதவியை 'திடீர்' ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

தில்லி துணை நிலை ஆளுநராக பதவி வகித்த காலகட்டத்தில் அளித்த உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  

Advertisement

நெருக்கக்கடியான காலகட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தில்லியில் அமல்படுத்தப்பட்டிருந்த பொழுது சிறப்பாக ஒத்துழைப்பு அழைத்த தில்லி பொதுமக்களுக்கும் நன்றி.

கடந்த இரண்டு வருடமாக நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்த தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் எனது நன்றி.

ராஜிநாமாவிற்கு பின்னர் எனது  முதல் காதலான படிப்பை நோக்கி செல்ல இருக்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.