முகப்பு
இந்தியா

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் கொள்ளை

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 டிசம்பர், 2016 at 1:11 PM
பகிர்:


புது தில்லி: தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு தில்லியில் அமைந்துள்ள சிசோடியாவின் தாற்காலிக அலுவலகத்தில் இருந்து கணினி மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளைபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்பர்கஞ்ச் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இன்று காலை தான் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது குறித்து தெரிய வந்துள்ளது.

உடனடியாக தடயவியல் துறையினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் உதவியோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.