FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாசிப்பயறு தேங்காய்ப் பால் மலாய்

வறுத்து உடைத்த பாசிப்பயறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, மென்மையாக வேக விடவும். வெந்தவுடன் பால் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

பகிர்:

தேவையான பொருள்கள்:

நாட்டுச்சர்க்கரை, பால், பாசிப் பயறு (வறுத்து உடைத்தது), கெட்டியான தேங்காய்ப் பால், தண்ணீர் - தலா 1 கிண்ணம்

நெய், ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி

Advertisement

Advertisement

முந்திரி - 6

திராட்சை - 1 மேசைக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :

வறுத்து உடைத்த பாசிப்பயறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, மென்மையாக வேக விடவும். வெந்தவுடன் பால் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பின்னர், நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து கரைய விடவும். பின்னர் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து 23 நிமிடம் சிம்மில் வைத்துக் கிளறவும். சிறிய வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து சேர்க்கவும். இறுதியாக ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்து, கலக்கி இறக்கவும்.

- நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments