ஜாமீன் கோரி கன்னையாகுமார் உச்ச நீதிமன்றத்தில் மனு
தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தை தாக்கியதாக கூறி தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினத்தையொட்டி, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறி, பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கன்னையா குமார் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொரப்ஜி, ராஜு ராமச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். எனினும், வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் ஜெ.செல்மேஷ்வர், ஏ.எம்.சப்ரே கூறினர்.
Advertisement