டீ விற்றவர் பிரதமர் ஆனதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை: மோடி
டீ விற்றவர் பிரதமரானதை நாட்டில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் தன்னை அவமானப்படுத்துவதற்கும் சதி நடப்பதாகவும் நரேந்திர மோடி கூறினார்.
டீ விற்றவர் பிரதமரானதை நாட்டில் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் தன்னை அவமானப்படுத்துவதற்கும் சதி நடப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசா மாநிலத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு மோடி பேசியதாவது:
அதிருப்தியாகவுள்ள தொண்டு நிறுவனங்களும், கள்ள சந்தைகாரர்களும் மத்திய அரசின் நிலைத்தன்மையை கெடுக்கவும், என்னை அவமானப்படுத்தவும் சதி செய்கின்றனர்.
Advertisement
ஒரு சாதாராண டீக்கடைக்காரர் நாட்டின் பிரதமர் ஆனதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை.
பாஜக அரசு அமைந்த பின்னர், வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் தனியார் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கணக்கு விவரங்கள் கேட்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் இணைந்து 'மோடியை தாக்கு' என்ற முழக்கத்தை எழுப்பினர்.
மேலும், அரசை நீக்குவதற்கும், என்னை அவமானப்படுத்துவற்கும் சதி செய்து வருகின்றனர்.
ஆனால், எனது சகோதர சகோதரிகளே, நாட்டை பிடித்துள்ள பிணியை நீக்கவே என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நான் அதைத்தான் செய்து வருகிறேன். எனக்கு எதிராக என்ன கூறினாலும், எனது பாதையிலிருந்து விலகி செல்லாமல் நீங்கள் என்னிடம் ஒப்படைத்தை பணியை நிறைவேற்றுவேன்.