முகப்பு
இந்தியா

இந்தோனேஷியா காவல் நிலையம் அருகே தற்கொலைப் படை தாக்குதல்

இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் காவல் நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Updated On : 5 ஜூலை, 2016 at 1:03 PM
பகிர்:

ஜகர்தா: இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் காவல் நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜாவா மாகாணத்தில் உள்ள காவல் நிலைய வாசலில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருச்சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூலம் குண்டு வெடிக்க செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். மேலும் அங்கிருந்த காவல் அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர்.  சேதமடைந்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement

இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்தோனேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.