அனந்தநாக் அருகே அமர்நாத் செல்லும் பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் செல்லும் பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின், அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் செல்லும் பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
அனந்தநாக் மாவட்டத்தில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பக்தர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement