இந்தியா

ஆம் ஆத்மி எம்எல்ஏ கர்தார் சிங் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தெற்கு தில்லியின் சத்தர்பூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ கர்தார் சிங் தன்வார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

IANS

புது தில்லி:  தெற்கு தில்லியின் சத்தர்பூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ கர்தார் சிங் தன்வார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை சோதனை குறித்து கட்சி தலைவர்கள் சிலர் விமர்சித்துள்ளனர்.

மத்திய புலனாய்வு, ஊழல் தடுப்பு பிரிவு  என மோடி அரசு எங்களைத் தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றது. அதற்கெல்லாம் ஆம் ஆத்மி கட்சி ஒருபோதும் தலை வணங்காது, வளைந்து கொடுக்காது என்று ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திலீப் பாண்டே தனது டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை எப்போதும் குறி வைத்துத் தாக்குவதே மோடி அரசுக்கு வழக்கமாக உள்ளது என்று மற்றொரு கட்சி தலைவர் சன்ஜாய் சிங் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 12-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT