இந்தியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட அசாம் விரைந்தார் ராஜ்நாத் சிங்

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

IANS

புதுதில்லி: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 21 மாவட்டங்களில் 17 லட்சம் பேர் வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

நாகான், மோரிகான், காசிரங்கா ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகட்காங் பகுதியைப் பார்வையிட்ட பின்னர், அசாம் முதல்வரைச் சந்தித்து ராஜ்நாத் சிங் பேச உள்ளார். இன்று மாலை அவர் மீண்டும் தில்லி திரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT