இந்தியா

சரத் யாதவ், ஜெத்மலானி, லாலு மகள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு

பிகார் மாநிலத்திலிருந்து சரத் யாதவ், ராம் ஜெத்மலானி மற்றும் லாலு பிரசாத் மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

PTI

பாட்னா: பிகார் மாநிலத்திலிருந்து சரத் யாதவ், ராம் ஜெத்மலானி மற்றும் லாலு பிரசாத் மகள் மிசா பாரதி உள்ளிட்டோர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உச்ச நீதிமன்றத்தின் பிரபல வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகள் மிசா பாரதி ஆகியோரும், ஐக்கிய தனதா தளத்தின் சார்பில் ராமச்சந்திர பிரசாத் சிங், பாரதீய ஜனதா கட்சி சார்பில் கோபால் நாராயணன் சிங் ஆகிய 5 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மீதான பல கோடி மாட்டு தீவன ஊழல் வழக்கில், அவரது சார்பாக ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT