இந்தியா

10 வயது சிறுமியைக் கடித்து குதறிய தெரு நாய்கள்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் புல் அறுக்க சென்ற சிறுமியை, தெரு நாய்கள் கடித்துக் குதறி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PTI

கார்கோன் (மத்ய பிரதேசம்): மத்திய பிரதேசம் மாநிலத்தில் புல் அறுக்க சென்ற சிறுமி, தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் உள்ள அடல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திணேஷ். இவரது மகள் பூஜா (10).

பூஜா, தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக அருகே உள்ள வயல்பகுதிக்கு நேற்று மாலை சென்றார்.

அப்போது அங்கு வந்த சுமார் 10க்கும் அதிகமான தெரு நாய்கள், பூஜாவை கடித்துக் குதறின. சிறுமியின் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் விரைந்து சென்று அந்த நாய்களை துரத்தி அடித்தனர்.

எனினும், பூஜாவை அந்த நாய்கள் மிகக் கொடூரமாகக் கடித்துவிட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

தெரு நாய்கள் கடித்ததில் சிறுமி ஒருவர் பலியான சம்பவம் அடல்பூர் கிராமத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT