முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் பயங்கரம்: தம்பதியர், 4 வயது குழந்தை சுட்டுக் கொலை

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகானத்தில் தம்பதியர் மற்றும் அவரது நான்கு வயது குழந்தை கொடூர முறையில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 21 ஜூன், 2016 at 2:34 PM
பகிர்:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகானத்தில் தம்பதியர் மற்றும் அவரது நான்கு வயது குழந்தை கொடூர முறையில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை வாயிலும், மனைவியை தலையிலும் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது நான்கு வயது குழந்தையை கோடாரி மூலம் சரமாரியாக அடித்து கொன்றுள்ளதாக டான் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

சடலத்தின் அருகே இருசக்கர வாகனம், அழகு சாதனங்கள் நிறைந்த பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இது கௌரவ கொலையாக இருக்கலாம் என்று  போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இறந்தவர்களின் இரத்தத்தை டி.என்.ஏ சோதனையின் மூலம் கணவன் மனைவி மற்றும் அவரது குழந்தை எனத் தெரிய வந்தது. கொடூர கொலையில் ஈடுபட்ட நபர்களை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.