முகப்பு
இந்தியா

பிகாரில் மின்னல் தாக்கி 53 பேர் பலி: சோனியா இரங்கல்

பிகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Updated On : 22 ஜூன், 2016 at 4:19 PM
பகிர்:

புது தில்லி: பிகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

பிகார் மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் என 53 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

Advertisement

மழைக்கால சேதங்களையும், உயிரிழப்புகளையும் தடுக்க பிகார் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.