உத்ரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு: போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தம்
உத்ரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக அப்பகுதியில் சாலை போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
டெராடூன்: உத்ரகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக அப்பகுதியில் சாலை போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நந்தபிரயாகில் உள்ள கேதார்நாத் நெடுஞ்சாலை மற்றும் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சாலைகளை சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. புனித யாத்திரைக்கு வந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அல்மோரா, பூரி, உத்திரகாசி, டெராடூன், உதம்சிங்நகர், சம்பாவாட், நைனிடால் ஆகிய மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.