தேச விரோதிகளை பாதுகாக்கிறது பாஜக: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
எல்லோரையும் விட தேச விரோத கட்சியாக பாஜக செயல்படுகிறது என்றும், தேச விரோதிகளை பாஜக பாதுகாக்கிறது என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
எல்லோரையும் விட தேச விரோத கட்சியாக பாஜக செயல்படுகிறது என்றும், தேச விரோதிகளை பாஜக பாதுகாக்கிறது என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
மற்ற எல்லோரையும் விட, பாஜக தான் தேசத்துக்கு விரோதமாக செயல்படுகிறது. பிறகு எதற்காக, ஜவகர்லால் நேரு பல்கலையில் தேசத்துக்கு விரோதமாக குரல் எழுப்பியவர்களை பாஜக பாதுகாக்கிறது? என்று கேஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பல்வேறு விஷயங்களில் ஆம் ஆத்மி கட்சியும், மத்தியில் ஆளும் பாஜகவும் மோதிக் கொள்ளும் நிலையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேசத்துக்கு விரோதமாகக் குரல் கொடுத்த மற்றவர்களையும் கைது செய்யுமாறு அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement