முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் மக்களை மோடி அவமதித்துவிட்டார்: சோனியா தாக்கு

பிரிவினைவாத, மதவாத சக்திகள் என்று அஸ்ஸாமில் உருவாகியுள்ள பாஜக கூட்டணியைப் பற்றி கருத்துக் கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா, அஸ்ஸாம் மக்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

Updated On : 30 மார்ச், 2016 at 5:21 PM
பகிர்:

சிவசாகர்: பிரிவினைவாத, மதவாத சக்திகள் என்று அஸ்ஸாமில் உருவாகியுள்ள பாஜக கூட்டணியைப் பற்றி கருத்துக் கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா, அஸ்ஸாம் மக்களை பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அஸ்ஸாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய சோனியா, தான் தேநீர் விற்ற போது அஸ்ஸாம் தேநீரையே விற்றதாகக் கூறிய பிரதமரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தான் ஏழையாக இருந்த போது அஸ்ஸாம் தேநீரை விற்றதாகக் கூறும் மோடி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக என்ன செய்தார்? அவர்களுக்கு நல்ல நாள் என்ற முழக்கத்தோடு மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட மோடி, அவர்களது நல்ல நாளுக்காக என்ன செய்தார் என்று கூறினார்.

Advertisement

வடகிழக்கு மக்களையும், அஸ்ஸாம் மக்களையும் மோடி அவமதித்துவிட்டதாக திரும்பத் திரும்பக் கூறிய சோனியா, பாஜக உடனான கூட்டணிக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் அமைதியும், மேம்பாடும் முற்றிலுமாக நாசமாகிவிடும். மாநிலத்தில் மதவேறுபாடும், பிரிவினைவாதமும் தலைதூக்கும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.