சத்தீஸ்கர்: கண்ணி வெடியில் சிக்கி 7 சிஆர்பிஎஃப் வீரர்கள் சாவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கி துணை ராணுவப் படையினர் 7 பேர் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கி துணை ராணுவப் படையினர் 7 பேர் உயிரிழந்தனர்.
தண்டேவாடா மாவட்டத்தின் மெலாவாடா என்ற கிராமம் வழியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) வாகனத்தில் இன்று மாலை சென்றனர். அப்போது, நக்ஸல்களால் ஏற்கெனவே புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி மீது, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் ஏறியதாகத் தெரிகிறது. இதில் அந்த வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இச்சம்பவத்தில் அந்த வாகனத்தில் இருந்த 7 சிஆர்பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வீரர்கள் செல்லும் வழியை பயங்கரவாதிகள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததால், கண்ணி வெடியை அங்கு புதைத்து வைத்திருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Advertisement
இதனிடையே தாக்குதலுக்குள்ளான வாகனத்தில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை நக்ஸல்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.