முகப்பு
இந்தியா

மே 22, 23-ல் ஈரான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் நாட்டுக்கு வருகிற 22, 23 தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

Updated On : 17 மே, 2016 at 3:12 PM
பகிர்:

புது தில்லி: வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் நாட்டுக்கு வருகிற 22, 23 தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

ஈரான் நாட்டு அதிபர் ஹாசன் ரவுஹானியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22, 23 தேதிகளில் அந்நாட்டுக்கு பிராயணம் மேற்கொள்கிறார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டின் மூத்த தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement

மேலும், மோடியின் இந்தப் பயணம் இரு நாடுகளிடையே இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி துறை மேம்பாடு, வர்த்தக உறவு, இரு நாட்டு மக்களிடையேயான உறவு மற்றும் இந்தப் பகுதியில் அமைதி மற்றும் ஒரு நிலைத்தன்மை ஏற்படுவதற்கு உதவும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் இந்த பயணத்துக்கு முன்பாகவே,  மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எரிசக்தி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் ஈரான் நாட்டு தலைநகர் டெஹ்ரான் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.