முகப்பு
தமிழ்நாடு

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

தேனியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 3:51 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

தேனியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

தேனி கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தனர்.

வெடி விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

பட்டாசு ஆலையின் மருந்து வைப்பறையில் இந்த விபத்து ஏற்பட்டது. முன்னதாக விருதுநகா் மாவட்டம், கட்டனாா்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் பலியாகினா்.

மேலும் பலா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

இந்த சம்பவத்தில் துயரம் மறைவதற்குள் தற்போது தேனி மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Two people died in an explosion at a cracker factory in Theni.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.